- திமுக
- நிலக்கோட்டை
- மாவட்ட பொருளாளர்
- சத்யமூர்த்தி
- தென்னிந்திய ஒன்றியம்
- மணிகண்டன்
- வடஒன்றியம்
- சௌந்தர பாண்டியன்
- மேற்கு ஒன்றியம்
- தின மலர்
நிலக்கோட்டை, மார்ச் 5: நிலக்கோட்டையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடந்தது. தொகுதி பொறுப்பாளர், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை வரவேற்றார்.
கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர், முன்னாள் எம்எபி கம்பம் செல்வேந்திரன் பூத் வாரியாக மேற்கொண்ட பணிகளை ஆய்வு செய்ததுடன், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தார். கூட்டத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பிரசார இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளைச்சாமி, வெள்ளிமலை, நெடுமாறன், ராஜாங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூர் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
The post நிலக்கோட்டையில் திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.